ஞாயிறு, 18 மார்ச், 2012

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.


وَلاَ يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 180


அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு சிறந்தது என்று எண்ண வேண்டாம் மாறாக அது அவர்களுக்கு தீயது அவர்கள் எதில் கஞ்சத் தனம் செய்தார்களோ அதன் மூலம் மறுமை நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 3:180

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...   

ஏழையின் சிரிப்பில் எவ்வாறு இறைவனைக் காண முடியும் என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்நத காலத்திலேயே பட்டியலிட்டுக் கூறி அதை அவர்களும் அவர்களுடைய ஆருயிர் தோழர்களும் நடைமுறைப் படுத்தி;க் காட்டினார்கள்.

அல்லாஹ் இறுதித் தீர்ப்புநாளில் கூறுவான்: ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு உணவளிக்கும்படி கேட்டேன், ஆனால் நீ உணவளிக்கவில்லை.

அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் உணவளித்து அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் ?

அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய பசிக்கு உணவளிக்கும்படிக் கேட்டான். ஆனால் நீ மறுத்து விட்டாய் நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அதை நீ எனக்கு அளித்ததாக பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது நீ என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
   
ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு நீர் புகட்டும் படிக்கேட்டேன், ஆனால் நீ மறுத்து விட்டாய்.

அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் நீர் புகட்டி அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு நீர் புகட்ட முடியும் ?

அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்ட பொழுது  நீ அதை மறுத்து விட்டாய் நீ அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கொடுத்திருந்தால், நீ எனக்கு நீர் புகட்டி என் தாகத்தை தனித்ததாக நான் கருதி பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? என்று இறைவன் கூறுவதன். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஆதார நூல் (முஸ்லிம்)

ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத வறியவர் ஒருவர் தனது வீட்டு வாசலில் பசியோடும், தாகத்தோடும் நின்று கையேந்தும் பொழுது அவருக்கு தேவையான உணவையும், நீரையும் புகட்டினால் அவர் உண்டு புசித்து அவரது பசி அடங்கும் போது உங்களை நோக்கி புன்முறுவல் பூப்பார் அங்கு இறைவனைக் காண்பீர்கள் என்று கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் கூறினார்கள்.

அத்துடன் தர்மத்தை ஆர்வமூட்டி இறைவனிடமிருந்து புனித வசனங்கள் இறங்கியதும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் பொருளாதாரத்தை ஏழை எளியோருக்கு வாரி வழங்கி இறைதிருப்தியை அடையலானார்கள்.

தர்மம் செய்ய வில்லை என்றால் இறைகோபத்திற்கு ஆளாக நேரிடுமோ ? என்று அஞ்சிய ஏழை  நபித்தோழர்கள் கடை வீதிகளுக்கு சென்று கூலி வேலைப் பார்த்து அதில் கிடைக்கின்ற சொற்ப கூலியில்  தங்களுடைய குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீதியை ஏழை எளியோர்களுடைய வீடுகளை தேடிச்சென்று அவர்களுடைய துயர் துடைத்த நிகழ்வுகள் உலக வரலாற்றில் சல்லடை போட்டுத் தேடினாலும் பெருமாhர்(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதயாத்தில் தவிர வேறு எதிலும் திட்டவட்டமாக காண முடியாது.

ஜென்டில் மேன் ??? சமுதாயத்தினர்களால் இன்றளவும் ஒட்;டக ஓட்டிகள் என்றும், காட்டு மிராண்டிகள் என்றும் ஏளனம் கூறிய மக்களைக் கொண்டே மேல்படி ஜென்டில்மேன்களே ??? வெட்கி தலைகுணியும் அளவுக்கு சகோதரத்துவம் - சமத்துவம் போன்ற எண்ணற்ற மனிதாபிமான அடிப்படையிலானப் பணிகளை செய்ய வைத்து சாதனைப் படைத்துக் காட்டினார்கள் எம்பெருமானார்(ஸல்) அவர்கள்.

யாசகம் கேட்டு கையேந்தாத ஏழைகள்

மக்களுடைய வீடுகளுக்குச் சென்று ஒரு கவளம், இரண்டு கவளம் அல்லது ஒரு பேரீச்சை, இரண்டு பேரீச்சம் பழங்கள் வாங்கிக் கொண்டு திரும்புபவர்கள் ஏழையல்ல மாறாக, தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் அளவுக்கு வசதி இல்லாதவரே ஏழை. மக்கள் அவர்களுடைய ஏழ்மையைப் புரிந்து கொள்வதும் இல்லை. அவர்களும் மக்கள் முன்னால் சென்று கையேந்துவதில்லை. இத்தகையவர்களே ஏழைகளாவார்கள். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ஆதார நூல் (புகாரி, முஸ்லிம்)

ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் அம்மா தாயே! பசி தாங்க முடியவில்லை என்று வீட்டு வாசலில் கையேந்தி நிற்கும் பரம ஏழைகள் ஒரு ரகம்,

பிறரிடம் யாசகம் கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வறுமையிலும், கடனிலும் உழண்டுத் தவிக்கும் ஏழைகள் இன்னொரு ரகம்.

மேற்கானும் முதல் ரகத்தினர் நமது சொந்த ஊர்க்காரர்களாகவும் இருக்கலாம் அல்லது வெளிஊர் காரர்களாகவும் இருக்கலாம்.

ஆனால் இரண்டாம் ரகத்தினரை ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் ஊரில், அதே தெருவில் பார்க்கலாம். அவர்களுடைய நிலையே மிகவும் பரிதாபகரமானது ,

  • வாடகை வீட்டில் வசிப்பார்கள் வாடகை செலுத்த முடியாமல் வீட்டுக்கு சொந்தக்காரரிடம் தவணைக்கு மேல் தவணை சொல்லிக் கொண்டிருப்பார்கள்,
  • அத்தியாவசிய தேவைகளுக்காக பிறரிடம் கடன் பெற்று குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியாமல் கடன் காரரிடம் தேவையற்ற வாரத்தைகளைக் கேட்டுக் கொண்டு பதில் சொல்ல முடியாமல் பரிதவிப்பார்கள் கடன் வாங்கும் போது ஒரு பொய் சொல்வார்கள், குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியாததற்கு பல பொய்களை சொல்வார்கள்.
  • நன்றாக படிக்கக் கூடிய பிள்ளைகளை செலவு செய்து படிக்க வைக்க முடியாமல் டீ கடைகளில் கிளாஸ் கழுவ விட்டிருப்பார்கள். அவனுக்கு திறமை இருந்தும் அவனது பெற்றோரிடம் பொருளாதாரம் இல்லாததால் படிக்க முடியாமல் சமுதாயத்தில் பின்னடைவை அடைந்து விடுவான்.
  • காலை உண்டால் மதியம் இல்லை, மதியம் உண்டால் இரவுக்கில்லை, என்று பசியால் வாடி வதங்குவார்கள் ஆனாலும் யாசகம் கேட்க அஞ்சுவார்கள்.

ஹஜ் செய்யச் செல்லவிருக்கும் செல்வந்தர்களே! ஹஜ் செய்யச் செல்வதற்கு முன் சுவர் விளம்பரங்களுக்காக ''வால்போஸ்டர்கள்' அடிப்பதற்கென்று பெருந்தொகையை ஒதுக்குவார்கள் ?

ஹஜ்ஜை முடித்து விட்டு தாயகம் திரும்பும் அப்துல் குத்தூஸ் ஹாஜியார் ??? அவர்களை வருக! வருக! என வரவேற்கிறோம் !! என்று ஊர் முழுவதும் உள்ள சுவர்களில் நீங்கள் வருவதற்கு முன்பே ஒட்டுவதற்காக ஒரு தொகையை ஒதுக்குவீர்கள்.

ஹஜ் செய்வதற்கு முன் ஊரில் உள்ள உங்களைப் போன்ற செல்வந்தர்கள் வரவழைக்கப்பட்டு உயர்தர விருந்திற்கு ஏற்பாடு செய்வீர்கள் அதற்கு பெருந் தொகையை ஒதுக்குவீர்கள் குறைந்த பட்சம் அந்த விருந்திலும் கூட அன்றாடங் காய்ச்சிகளை புறக்கனிப்பீர்கள் விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைih(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

ஹஜ்ஜூக்கான பயண செலவுகள் போக குறைந்தபட்சம் இதர ஆடம்பர செலவுகளுக்காக ஒதுக்குகிற தொகைளையாவது தேவையுடைய மக்களுக்கு கொடுத்துதவுங்கள்.

ஆடம்பர விருந்துக்காக ஒதுக்குகிற தொகையில் ஒரு ஏழை மாணவனை இஞ்சினியராக்கலாம் அது ''ஸதக்கத்துல் ஜாரியா' எனும் நிரந்தர தர்மத்தில் சேர்க்கும் !

இரண்டு முறை செய்யப்படும் சுவர் விளம்பரங்களுக்காக ஒதுக்குகிற தொகையில் இரண்டு ஏழைகளுக்கு சிறு தொழில் செய்ய உதவலாம்.

கூலி வேலை செய்து அதில் கிடைக்கின்ற அற்ப தொகையில் தர்மம் செய்து மகிழ்ந்த உத்தமர்களுடைய வாரிசுகளல்லவா நாம் ? குறைந்த பட்சம் நம்முடைய ஆடம்பர செலவுகளை ஒதுக்கியாவது ஏழைகளுக்கு உதவ முன் வரக்கூடாதா ? சிந்தித்தால் சீர்பெறுவோம் !

மேற்கானும் இரண்டாம் ரகத்தினர் யார் என்பதை அறிந்து அவர்களை தேடிச்சென்று உங்களது பொருளாதாரத்திலிருந்து ஒரு தொகையை அல்லாஹ்வுக்காக ஒதுக்கிக் கொடுத்து

  • அவர்களுடைய கடனை அடைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
  • அவர்களுடைய பிள்ளைகளில் ஒரிருவரை மேல்படிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.
  • எஞ்சியதை கொண்டு சிறு தொழில் செய்து கொள்ளச் சொல்லுங்கள்.

அவர்கள் உங்களிடம் கையேந்த வெட்கபப்டுவதால் நீ;ங்கள் அவர்களுக்கு செய்யும் இந்த உதவியை உங்களது வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்யுங்கள். இதுவே உங்களை நரக நெருப்பிலிருந்து மீட்கும்.

சொந்த ஊரில், சொந்த தெருவில் உங்களுடைய பார்வைக்கு தெரியும் விதமாக அல்லல்படும் ஏழைகளுடைய துயர்துடைக்க முன்வராமல் பயண செலவுகளுக்காகவென்றும், தேவையில்லாமத விளம்பரத்ததுக்காகவும் பெந்தொகையை ஒதுக்கி நீங்கள் செய்த ஹஜ்ஜை இறைவனிடம் காரணம் காட்டி நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். ஆதார நூல் 1418.

உலகில் செய்யும் நல்லறங்களில் மறுமையின் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு கேடயமாக அமைவது தர்மம் என்ற முக்கிய அறமாகும் என்பதை மேற்கானும் நபிமொழியில் பெருமானார்(ஸல்) அவர்கள் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ( குறைந்த பட்சம் பேரீச்சம் பழத்தையேனும் ) தர்மம் செய்து நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளும் படி எச்சரித்தார்கள்.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு சிறந்தது என்று எண்ண வேண்டாம் மாறாக அது அவர்களுக்கு தீயது அவர்கள் எதில் கஞ்சத் தனம் செய்தார்களோ அதன் மூலம் மறுமை நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 3:180
 
ஜகாத் என்ற இறைவன் கடமையாக்கிய ஏழை வரியை கொடுத்திருப்பீர்கள் அதையும் மறுத்தால்

''அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய புதையல்'' என்று கூறும்.''

நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.'' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். ஏன்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள் புகாரி  1403.

ஹஜ்ஜூடைய மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜூடைய கடமையை இறைவன் இறுதி கடமையாக்கினான்.

ஹஜ்ஜூக்கு முன்பு நான்கு முக்கியமான கடமைகளை; ஒழுங்குடன் செய்திருந்தால் இறுதி கடமையகிய ஹஜ் முத்திரையாக அமைந்து விடும் அதற்காகத் தான் இறுதி கடமையாகிய ஹஜ்ஜை செய்;ய முற்படுவோருக்காக இறைவன் இரண்டரை மாதங்களை ஒதுக்கி அதில் இறையச்சத்தை திரட்டிக் கொள்ள உத்தரவிட்டான்.

  1. நீங்கள் இறையச்சத்துடன் ஹஜ் செய்கீன்றீர்களா ?
  2. சமுதாய மக்களிடம் ஹாஜி என்ற பட்டத்தைப் பெறுவதற்காக ஹஜ் செய்கின்றீர்களா ?

என்பதை இறைவன் அறியக் கூடியவனாக இருக்கிறான் அதனடிப்படையில் தண்டனையா ? வெகுமதியா ? என்பதை உலக முடிவு நாளின் விசாரணையின் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இறையச்சத்துடன் இறைதிருப்தியை எதிர்பார்த்து ஹஜ் செய்;ய முற்பட்டால் ஹஜ்ஜை முடித்ததும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்றுப்பிறந்த பாளகன் போன்றாகி அதற்குப் பிறகு இறையச்சமுடையோராய் ஆகி விடுவீர்கள்.  வல்ல அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளும் பாக்கியசாலிகளாக ஆக்கி அருள் புரிவானாக !



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: